ODI WC 2023 | அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்கா தகுதி - தொடரில் இருந்து வெளியேறியது இங்கிலாந்து

By செய்திப்பிரிவு

பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் நியூஸிலாந்து - பாகிஸ்தான் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தானை பின்னுக்குத் தள்ளி மீண்டும் 5வது இடத்திற்கு முன்னேறியது பாகிஸ்தான்.

அதேநேரம், இந்த தொடரில் முதல் 4 போட்டிகளில் தொடர்ந்து வெற்றியையும், கடைசி 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியையும் சந்தித்துள்ளது நியூஸிலாந்து அணி.

இதனிடையே, நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம், தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதி சுற்றுக்கு செல்வது உறுதியானது.

தொடரில் இருந்து வெளியேறியது இங்கிலாந்து: அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 287 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து 11 பந்துகள் மீதமிருக்கையில் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது இங்கிலாந்து. இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் 6வது தோல்வியை சந்தித்த நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இரண்டாவது அணியாக உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. ஏற்கனவே வங்கதேசம் இந்த தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா, உலகக் கோப்பை தொடரில் முதல் 2 போட்டிகள் தோல்வியை சந்தித்து. எனினும், அடுத்தடுத்து 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா, 10 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE