ODI WC 2023 | கைகூடாத இங்கிலாந்தின் முயற்சி - 33 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

287 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டத்தின் முதல் பந்தே ஸ்டார்க் பந்துவீச்சில் பூஜ்ஜியத்தில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். சில நிமிடங்களில் ஜோ ரூட்டும் 13 ரன்களில் ஸ்டார்க் ஓவரில் வீழ்ந்தார். என்றாலும் பென் ஸ்டோக்ஸ், டேவிட் மலான் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். இருவரும் பொறுப்பாக விளையாடி 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்த நிலையில் டேவிட் மலான் 50 ரன்களுக்கு அவுட் ஆனார். இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பிவரும் கேப்டன் ஜாஸ் பட்லர் வந்த வேகத்தில் 1 ரன் மட்டுமே எடுத்து ஜம்பாவின் சுழலில் சிக்கினார்.

இதே ஜம்பா ஓவரில் 64 ரன்கள் எடுத்திருந்த ஸ்டோக்ஸ் விக்கெட்டாக, லியாம் லிவிங்ஸ்டோன் 2 ரன்களே எடுத்து பெவிலியன் திரும்பினார். மொயீன் அலி தனது பங்குக்கு 42 ரன்கள் எடுத்து வெளியேற கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் இணைந்து வெற்றியை நோக்கி போராடினார். ஆனால், அவர்களின் முயற்சி கைகூடவில்லை. இறுதிக்கட்டத்தில் 32 ரன்கள் எடுத்திருந்த கிறிஸ் வோக்ஸ் ஸ்டோய்னிஸ் ஓவரில் கேட்ச் ஆனார். அடுத்த பந்தே அடில் ரஷீத்தும் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆக, 11 பந்துகள் மீதமிருக்கையில் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது இங்கிலாந்து. இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் 6வது தோல்வியை சந்தித்தது இங்கிலாந்து. 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா தரப்பில் ஜம்பா 3 விக்கெட்டும், ஸ்டார்க், ஹேஷில்வுட் மற்றும் கம்மின்ஸ் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தி வெற்றிக்கு கைகொடுத்தனர்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா பெறும் 5வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது.

ஆஸ்திரேலியா இன்னிங்ஸ்: டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ட்ராவிஸ் ஹெட் 2ஆவது ஓவரிலேயே 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்து டேவிட் வார்னரும் நிலைக்காமல் 15 ரன்களில் கிளம்பினார். மார்னஸ் லாபுசாக்னே - ஸ்டீவன் ஸ்மித் இணை தாக்குப் பிடித்து ஆடினாலும், அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அடில் ரஷீத் வீசிய 22-வது ஓவரில் ஸ்டீவன் ஸ்மித் 44 ரன்களில் விக்கெட்டானார்.

ஜோஷ் இங்லிஸ் 3 ரன்களில் பெவிலியன் திரும்ப, 30 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை சேர்த்திருந்தது ஆஸ்திரேலியா. மார்னஸ் லாபுசாக்னே 71 ரன்களையும், கேமரூன் கிரீன் 45 ரன்களையும் சேர்த்துவிட்டு கிளம்ப, அடுத்தடுத்து வந்த வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. மார்கஸ் ஸ்டோயினிஸ் 35 ரன்களிலும், பாட் கம்மின்ஸ் 10 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் 10 ரன்களிலும், ஆடம் ஜம்பா 29 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டாகி வெளியேற, 49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 286 ரன்களை சேர்த்தது.

இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், மார்க் வுட், அடில் ரஷீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் வில்லி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்