ODI WC 2023 | நியூஸி.யின் ரச்சின், கேன் அதிரடி - பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் இலக்கு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 401 ரன்களை குவித்துள்ளது. இதில் ரச்சின் ரவீந்திரா 94 பந்துகளில் 108 ரன்களையும், கேன் வில்லியம்ஸ் 79 பந்துகளில் 95 ரன்களையும் விளாசி அதிரடி காட்டினர் பாகிஸ்தான் அணிக்கு 402 என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா - டெவோன் கான்வே இணை நிதானமாக தொடங்கியது. ஆறு பவுண்டரிகள் விளாசி 39 பந்துகளில் 35 ரன்களை சேர்த்து நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடிய டொவோன் கானவேவை ஹசன் அலி 11-ஆவது ஓவரில் விக்கெட்டாக்கினார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் - ரச்சின் ரவீந்திராவுடன் கைகோக்க இருவரும் இணைந்து பாகிஸ்தானின் பவுலிங்கை நாலாபுறமும் பறக்கவிட்டனர். 16 ரன்கள் இருந்தபோது உலக கோப்பையில் குறைந்த இன்னிங்ஸில் 1,000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை கேன் வில்லியம்ஸ் பெற்றார்.

இந்த இணையை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணற, ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்தினார். உலகக் கோப்பை போட்டியில் 25 வயதுக்குள் 3 சதத்தை விளாசிய பெருமையை பெற்றிருக்கிறார் ரச்சின். இதற்கு முன் 22 வயதில் 2 சதங்களை விளாசியவர் என்ற பெருமையை சச்சின் பெற்றிருந்தார். மறுபுறம் கேன் வில்லியம்சன் சதத்தை நெருங்கி கொண்டிருக்க இஃப்தார் அகமத் வீசிய 35-ஆவது ஓவரில் 95 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து ரச்சின் ரவீந்திரா 108 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

டேரில் மிட்செல் 29 ரன்களுடனும், மார்க் சாப்மேன் 39 ரன்களுடனும், க்ளென் பிலிப்ஸ் 41 ரன்களில் வெளியேற, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து 401 ரன்களை குவித்தது. மிட்செல் சான்ட்னர் 26 ரன்களுடனும், டாம் லாதம் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

401 ரன்கள் என்பது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்னதாக 2008-ம் ஆண்டு அயர்லாந்து உடனான போட்டியில் 402 ரன்களை நியூசிலாந்து குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி தரப்பில், முஹம்மது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளையும், ஹஸன் அலி, ஹரீஸ் ரவூஃப், இப்திகார் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்