கொல்கத்தா: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 45.1 ஓவரில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரரான தன்ஸித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல் ஷாகீன் ஷா அப்ரிடி பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 4, முஸ்பிகுர் ரகிம் 5 ரன்களில் நடையை கட்டினர். 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மஹ்மதுல்லா, லிட்டன் தாஸுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.
ஓவருக்கு சராசரியாக 5 ரன்கள் வரை சேர்த்த இந்த ஜோடியை இப்திகார் அகமது பிரித்தார். லிட்டன் தாஸ் 64 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் இப்திகார் பந்தில் எளிதான முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். மஹ்மதுல்லா 70 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 56 ரன்கள்எடுத்த நிலையில் ஷாகீன் ஷா அப்ரிடி பந்தில் போல்டானார்.
சற்று தாக்குப்பிடித்து விளையாடிய கேப்டன் ஷகிப் அல் ஹசன் 43, மெஹிதி ஹசன் 25 ரன்களில் ஆட்டமிழந்தனர். தவுஹித்ஹிர்தோய் 7, தஸ்கின் அகமது 6, முஸ்டாபிஸுர் ரஹ்மான் 3 ரன்களில் நடையை கட்டினர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகின் ஷா அப்ரிடி, மொகமது வாசிம் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஹரிஸ் ரவூஃப் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
» உத்தரபிரதேசம் | சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது: உயிர் சேதம் இல்லை
» “அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி உறுதி; டாப் 4 அணிகளில் இடம் பிடிக்கும்” - பாக். ரசிகர்
205 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபிக் 69 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் பஹர் ஸமான் 74 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 81 ரன்களும் விளாசிய நிலையில் மெஹிதி ஹசன் பந்தில் ஆட்டமிழந்தனர். கேப்டன் பாபர் அஸம் 9 ரன்களில் நடையை கட்டினார். மொகமது ரிஸ்வான் 26, இப்திகார் அகமது 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்திருந்த பாகிஸ்தான் அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. 7 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 6 புள்ளிகளுடன் பட்டியலில்5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
ஷாகீன் ஷா அப்ரிடி 100: வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் தன்ஸித் ஹசனை பாகிஸ்தானின் ஷாகீன் ஷா அப்ரிடி ஆட்டமிழக்கச் செய்தார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஷாகீன் ஷா அப்ரிடி கைப்பற்றிய 100-வது விக்கெட்டாக அமைந்தது. தனது 51-வது ஆட்டத்தில் இந்த மைல்கல் சாதனையை அவர் எட்டியுள்ளார். மேலும் உலக அரங்கில் குறைந்த ஆட்டங்களில் 100 விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ஷாகீன் ஷா அப்ரிடி. இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 52 ஆட்டங்களில் 100 விக்கெட்களை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது ஷாகீன் ஷா அப்ரிடி முறியடித்துள்ளார். 51 ஆட்டங்களில் விளையாடிய ஷாகீன் ஷா அப்ரிடி இதுவரை 102 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago