ஹர்திக் பாண்டியா, தான், நீங்கலாக அணியில் ஒருமுறையாவது இப்போதுள்ள வீரர்களை நீக்கம் செய்துள்ள விராட் கோலி, செஞ்சூரியன் மைதானத்தில் தொடரை இழந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியா மனநிலையில் கொதிப்படைந்தார்.
செஞ்சூரிய மைதானம் கிட்டத்தட்ட துணைக்கண்ட பிட்ச் போல் அமைந்திருந்தது அதற்குரிய சிறந்த 11 வீர்ர்களைத்தான் தேர்ந்தெடுத்தீர்களா ன்என்ற கேள்வி கேட்கப்பட்டவுடன் கோலியின் பதில்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு இருந்தது:
கேள்வி: கடந்த 2 ஆண்டுகளாக துணைக்கண்ட பிட்ச்களில் ஆடியதையடுத்து இவ்வகை பிட்ச்களில் சிறப்பாக ஆடுவதற்கான சூத்திரத்தை வந்தடைந்திருப்பீர்கள். இரு அணி வேகப்பந்து வீச்சாளர்களுமே இது துணைக்கண்ட பிட்ச் போல்தான் உள்ளது என்று கூறிஉள்ளதையடுத்து ஒருவேளை நீங்கள் சிறந்த 11 வீரர்களைக் களமிறக்காது தோல்வியடைந்தது எந்தவகையில் காயப்படுத்தியுள்ளது?
கோலி: எது சிறந்த லெவன்?
கேள்வி: இதுதான் உங்கள் சிறந்த லெவனா?
கோலி: வெற்றி பெற்றிருந்தால், இது சிறந்த லெவனாக இருந்திருக்குமா?
கேள்வி: மீண்டும்... இது துணைக்கண்ட பிட்ச் போல்...
கோலி: வெற்றி தோல்விகளை வைத்து நாங்கள் லெவனை முடிவு செய்வதில்லை என்று கூறுகிறேன்.
கேள்வி: என்னுடைய கேள்வி பிட்ச் பற்றியது..
கோலி: சிறந்த லெவனை களமிறக்கியிருக்க வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். எனவே சிறந்த லெவனை நீங்கள் கூறுங்கள் நாங்கள் அதனை களமிறக்குகிறோம். தோல்வி காயப்படுத்தவே செய்கிறது என்று நான் கூறிவிட்டேன். ஆனால் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதனை நாம் ஆதரிக்க வேண்டும்.
‘ஒரு போட்டியில் தோல்வியடைந்து விட்டீர்கள் எனவே இந்த மட்டத்துக்கு நீங்கள் தேர்ந்தவர் அல்ல’ என்று கூறுவதற்காக நாங்கள் இங்கு உட்கார்ந்திருக்கவில்லை. இந்தியாவில் தோற்கவில்லையா? அங்கும் சிறந்த 11-ஐத்தான் களமிறக்கினோம். யார் விளையாடினாலும் களத்தில் அணிக்காக பங்களிப்புச் செய்ய வேண்டும். இதனால்தான் மிகப்பெரிய அணியை அழைத்து வந்துள்ளோம். அவர்களது திறமையில் எங்களுக்கு நம்பிக்கை இருப்பதால்தான், இந்த மட்டத்தில் அவர்களால் ஆட முடியும் என்பதால்தான் அழைத்து வந்திருக்கிறோம். ஆனால் ஒரு அணியாக திரண்டு ஆட வேண்டும். எனவே இதுதான் சிறந்த லெவன் என்று குறிப்பிட்டு நீங்கள் சொல்ல முடியாது. இதற்கு முன்பாகக் கூட வலுவாகத் தெரியும் அணியுடன் ஆடி தோல்வியடைந்திருக்கிறோம். எனவே உங்களது சிறந்த லெவன் என்ற கருத்துக்கு என்னால் செவிசாய்க்க முடியாது.
கேள்வி: அணியாக திரண்டு வரவில்லை என்கிறீர்கள், அதற்குக் காரணம் அணியை அடிக்கடி மாற்றும் உங்கள் முடிவாக இருக்கலாம் அல்லவா? 30 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் நீங்கள் கேப்டனாக இருந்துள்ளீர்கள், ஒவ்வொரு முறையும் லைன் அப்பை மாற்றியிருக்கிறீர்கள் இல்லையா? டெஸ்ட் போட்டிகளை வெல்ல சீரான ஆட்டம் தேவை. உங்களிடம் அது இல்லை. இதற்கு என்ன கூறுகிறீர்கள்? தொடர்ந்து அணியை மாற்றிக் கொண்டேயிருப்பேன் ஆனால் வித்தியாசமான ஆட்ட முடிவுகளை எதிர்பார்ப்பேன் என்று நீங்கள் எப்படி கூற முடியும்? அப்படி எத்தனை முறை லெவனை மாற்றியிருக்கிறோம்?
கோலி: எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறோம்? 21 வெற்றிகள். இரண்டு தோல்விகள். எத்தனை டிராக்கள்? (கோலி 34 டெஸ்ட் போட்டிகளில் 20-ல் வென்று 5-ல் தோற்றிருக்கிறார்)
கேள்வி: இந்தியாவில் எத்தனை வெற்றிகள்?
கோலி: இது பரிசீலனைக்கு உரியதுதானா? எங்கு விளையாடினாலும் நாங்கள் சிறப்பாக ஆட முயற்சிக்கிறோம். நான் இங்கு உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கவே வந்திருக்கிறேன், சண்டையிட அல்ல.
கேள்வி: இந்தியாவில்தான் நாம் வெல்கிறோம். அயல்நாடுகளில் அல்ல என்று பேச்சு இருந்து வருகிறது.. இன்னமும் கூட உங்கள் அணி உலகின் சிறந்த அணி என்று நம்புகிறீர்களா?
கோலி: சிறந்த அணி என்று நாங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இங்கு வரும்போது நாம் சிறந்த அணி, வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தில் வராமல் இருந்தால் இங்கு வருவதே விரயம்தான். இங்கு வெறுமனே பங்கேற்க மட்டும் வரவில்லை. உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறேன், தென் ஆப்பிரிக்கா எத்தனை முறை இந்தியாவில் ஆடும்போது வெற்றிக்கு அருகில் வந்துள்ளனர்? உங்களால் கூற முடியுமா?
கேள்வி: அது பிட்ச்களினால் தானே?
கோலி: நாங்கள் கேப்டவுன் பிட்ச் பற்றி புகார் எதுவும் கூறவில்லையே? நாங்கள் களம் பற்றியோ சூழல் பற்றியோ புகார் கூறவில்லையே. இங்கு விளையாடவே வந்திருக்கிறோம். இரு போட்டிகளிலும் நாங்களும் வெற்றி பெறுவதற்கான சமவாய்ப்பு இருந்தது இந்த நேர்மறையான விஷயத்தை நாம் ஏற்க வேண்டும். நான் ஏதோ இங்கு உட்கார்ந்து கொண்டு வீரர்களைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். அனைவரும் தங்களையே கடினமாக்கிக் கொள்ள வேண்டும் என்றுதான் நான் கூறி வருகிறேன்.
என்றார் கோலி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago