வெளிநாடுகளில் விளையாடுவது போல் உள்ளது; இந்திய ஆடுகளங்களில் அனுபவம் இல்லை - பாக். பயிற்சியாளர் புலம்பல்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் இல்லாததால் வெளிநாடுகளில் விளையாடுவது போன்று இருப்பதாகவும். இதுவே தொடர் தோல்விகளுக்கு காரணமாக அமைந்ததாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் தெரிவித்துள்ளார்.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்ததால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துள்ளது. அந்த அணி அரைஇறுதி வாய்ப்பை பெற வேண்டுமானால் எஞ்சியுள்ள 3 லீக் ஆட்டங்களிலும் பெரிய அளவிலான வெற்றிகளை குவிக்க வேண்டும் மேலும் மற்ற அணிகளின் முடிவுகள் இவர்களுக்கு சாதகமாக அமைய வேண்டும். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் கூறியதாவது:

உலகக் கோப்பை தொடரில் நாங்கள் இருக்க விரும்பாத நிலையில் இருக்கிறோம். இது எங்கள்அணியை காயப்படுத்தி உள்ளது. உலகக் கோப்பை தொடர் எங்களுக்கு வெளிநாட்டு நிலைமைகளில் உள்ளது போன்று இருக்கிறது. இதற்கு முன் எங்கள் வீரர்கள் யாரும் இந்திய மைதானங்களில் விளையாடியதில்லை. ஒவ்வொரு மைதானமும் எங்களுக்கு புதியதாகவே இருக்கிறது.

ஒவ்வொரு ஆட்டத் துக்கும்,எதிரணிக்கும், விளையாடும் இடங்களுக்கும் தகுந்த வகையில் நாங்கள் சிறப்பாகவே தயாராகிறோம். ஆனால் ஒவ்வொரு மைதானமும் எங்களுக்கு புதிதாகவே இருக்கிறது. எனினும் எங்கள் அணி வீரர்களுக்கு இருக்கும் விளையாட்டு தொடர்பான அறிவு, தரம், திறமை ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் பின்தங்கியதாக உணரவில்லை.

உலகக் கோப்பை போன்ற தொடருக்கான தயாரிப்பு நான்குஆண்டுகளுக்கு முன்பே தொடங்குகிறது. நாங்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கினோம்.கிரிக்கெட் விளையாட்டை, குறிப்பாக ஒரு நாள் போட்டியை நாங்கள் விளையாட விரும்பும் வழியில் விளையாடினோம்.

கடந்த ஆறு மாதங்களில் சிலசாதகமான முடிவுகளை வெளிக்காட்டினோம். நாங்கள் வெளிப்படுத்திய சில செயல்திறன்களை நினைத்து பெருமைப்படுகிறோம். எனினும் நாங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்க சிறிது நேரம் எடுக்கிறது. விளையாடும் சூழ்நிலைகளின் சவாலுடன் பொருந்தக்கூடிய ஒரு சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்