“எங்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறினால் சிறப்பு” - ஆப்கன் ரசிகர்கள் உற்சாகம்

By செய்திப்பிரிவு

புனே: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான். இந்தப் போட்டி முடிந்ததும் ஆப்கன் ரசிகர்கள் தங்கள் கருத்தினை தெரிவித்திருந்தனர்.

புள்ளிகள் பட்டியலில் தற்போது 5-வது இடத்தில் உள்ள ஆப்கன். 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளது அந்த அணி. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என முன்னாள் உலக சாம்பியன்களை வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான்.

“இந்த போட்டி அற்புதமாக இருந்தது. ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. ஆப்கன் அணி அரையிறுதிக்கு முன்னேறினால் சிறப்பாக இருக்கும்” என ஆப்கன் ரசிகர் முகமது அமல் தெரிவித்தார்.

“இந்த அணியை எண்ணி நாங்கள் பெருமை கொள்கிறோம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். பேட்டிங் மேம்பட்டுள்ளது. எதிர்வரும் போட்டிகளிலும் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என ஆப்கன் ரசிகர் சுபன் தெரிவித்தார்.

“இது சிறப்பான போட்டி. அணியின் பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என அனைவரது கூட்டும் முயற்சிக்கும் கிடைத்த பலன் இந்த வெற்றி. திறமையான வீரர்கள் அணியில் உள்ளனர் என ஆப்கன் ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்