உலகக் கோப்பை கிரிக்கெட் | இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 229 ரன்கள் சேர்ப்பு

By செய்திப்பிரிவு

லக்னோ: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் லக்னோவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 229 ரன்களை எடுத்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில், உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இன்று இந்தியாவும் இங்கிலாந்தும் விளையாடி வருகின்றன. முன்னதாக, டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர், பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் இணை துவக்கம் தந்தது. சுப்மன் 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனால், அடுத்து வந்த கோலி டக் அவுட்டானார். ஸ்ராயாஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால் இந்திய அணி தடுமாறியது. எனினும், கேட்பன் ரோஹித், பொறுப்புடன் விளையாடி 87 ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆனார். ராகுல் 39 ரன்களிலும், சூர்ய குமுார் 49 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். முடிவில், இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன்களை எடுத்தது. இதன் மூலம், இந்திய அணி, இங்கிலாந்துக்கு 230 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE