ODI WC 2023 | பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா போட்டி எப்படி? - சென்னை ரசிகர்கள் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி. சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை நேரில் பார்த்த ரசிகர்கள், ஆட்டம் குறித்து தங்கள் கருத்தினை தெரிவித்தனர்.

“உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறந்த போட்டிகளில் ஒன்று இது. சிறந்த அணி ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ரசிகர்கள் இரண்டு அணிக்கும் மாறி மாறி ஆதரவு வழங்கினர். பாகிஸ்தான் கூடுதலாக 20 ரன்கள் வரை எடுத்திருந்தால் முடிவு மாறி இருக்கும். கடைசி கட்டத்தில் அந்த டிஆர்எஸ் முடிவு ஆட்டத்தின் மிக முக்கிய தருணமாகும்” என பிரகாஷ் என்ற ரசிகர் தெரிவித்தார்.

“உலகக் கோப்பையின் த்ரில்லர் என்கவுன்ட்டர்களில் இந்த ஆட்டமும் ஒன்று. பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று தான் நினைத்தோம். ஆனால், கேஷவ் மகராஜ் அதை மாற்றினார்” என மற்றொரு ரசிகர் தெரிவித்தார்.

“சென்னையில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற வேண்டும் என்று தான் விரும்பினேன். நான் அந்த அணிக்கு ஆதரவு அளித்தேன். இறுதியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி” என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“தென் ஆப்பிரிக்கா சிறப்பாக விளையாடியது. பந்து வீச்சில் ஷம்சி மற்றும் பேட்டிங்கில் மார்க்ரம் சிறப்பாக செயல்பட்டனர். இந்த போட்டி சிறப்பானதாக இருந்தது” என மற்றொரு ரசிகர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்