ODI WC 2023 | இங்கிலாந்து - இலங்கை இன்று மோதல்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டியின் லீக் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி, இலங்கையுடன் மோதவுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி இதுவரை, 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதேபோல் இலங்கையும் 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, இந்தத் தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேண்டுமானால் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், கேப்டன் ஜாஸ் பட்லர், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகியோரும், பந்துவீச்சாளர்கள் சேம் கரண், ஆதில் ரஷீத், மார்க் உட் ஆகியோரும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும்.

அதேநேரத்தில், இங்கிலாந்தின் நிலையிலேயே இலங்கை அணியும் உள்ளது. அந்த அணியின் கேப்டன் தசன் ஷனகா காயம் காரணமாக விலகிய நிலையில் தற்போது வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவும் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தற்போது அணியில்ஏஞ்சலோ மேத்யூஸ் இணைந்துள்ளார்.

இலங்கை அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. பதும் நிசங்கா, குஷால் பெரேரா, குஷால்மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா ஆகியோர் அபாரமாக விளையாடி வருகின்றனர். அவர்கள் மீண்டும் ஒரு உயர்மட்டத் திறனை வெளிப்படுத்தும்போது அது நிச்சயம் இங்கிலாந்துக்கு சவால் அளிக்கும்.

அதேபோல், பந்துவீச்சில் தில்ஷன் மதுஷங்கா, ரஜிதா, கருணாரத்னே, தீக்சனா, தனஞ்செயா டி சில்வா ஆகியோர் பிரகாசிக்கும் பட்சத்தில் அது நிச்சயம் எதிரணிக்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE