சென்னை ரசிகர்களின் அன்பு மறக்க முடியாதது: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னையில் விளையாடிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வீரர்கள் சென்னை ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்தனர். சென்னை ரசிகர்களின் அன்பை மறக்க மாட்டோம் என்று ஆப்கானிஸ்தான் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 22-வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி விளையாடாத போதிலும், போட்டியைக் காணஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது. ஷபீக் 58, இமாம் உல் ஹக் 17, மொகமது ரிஸ்வான்8, சவுத் ஷகீல் 25 ரன்கள் சேர்த்தனர்.

கேப்டன் பாபர் அசம் பொறுப்பாக விளையாடி 92 பந்துகளில் 74 ரன்களைச் சேர்ந்தார். கடைசி நேரத்தில் இப்திகார் அகமது, ஷதாப் கான் ஆகியோர் தலா 40 ரன்களைக் குவித்து அணியின் ஸ்கோர் 280-ஐ தாண்ட உதவினர்.

பின்னர் 283 ரன்கள் என்ற வெற்றிஇலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் 49 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 286 ரன்கள் குவித்து அபார வெற்றியைப் பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மனனுல்லா குர்பாஸ் 53 பந்துகளில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 65 ரன்களையும், இப்ராஹிம் ஸத்ரன் 113 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 87 ரன்களையும் குவித்து நல்ல தொடக்கத்தைத் தந்தனர்.

பின்னர் வந்த ரஹமத் ஷா 77 ரன்களும், கேப்டன் ஹஸ்மத்துல்லா 48 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் பலம்வாய்ந்த பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றிப்பெற்றது. இது உலகக் கோப்பைகிரிக்கெட் போட்டியில் பெற்ற மிகப்பெரிய வரலாற்று வெற்றியாக ஆப்கானிஸ்தானால் பார்க்கப்படுகிறது.

வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியினரை சென்னை ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பி அன்பு மழையில் நனைய வைத்தனர். வெற்றி பெற்ற பின்னர் மைதானத்தை முழுவதுமாக வலம் வந்த ஆப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கு கைதட்டல்களையும், மகிழ்ச்சிக்கூக்குரல்களையும் ரசிகர்கள் எழுப்பி பரவசம் அடையச் செய்தனர். மைதானத்தை வீரர்கள் வலம் வந்தபோது சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

அதைப் போலவே பாகிஸ்தான் அணி வீரர்கள் பேட்டிங் செய்தபோது அந்த அணி வீரர்கள் விளாசிய ஒவ்வொரு பவுண்டரி, சிக்ஸருக்கும் எழுந்துநின்று கைகளைத் தட்டி வரவேற்றனர்.

சென்னையில் இந்திய அணி விளையாடும்போது ரசிகர்கள் அதிகமாக உற்சாகத்துடன் இருப்பர். அதைப் போலவே நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆட்டம் நடந்தபோது அதே உற்சாகத்தைக் காண முடிந்தது.

இதைத் தொடர்ந்து சென்னை ரசிகர்களின் அன்பை என்றுமே மறக்க முடியாது என்று ஆப்கானிஸ்தான் அணியினர் மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்