கோவையில் நேற்று நடைபெற்ற ‘ஹீரோ ஐ லீக் 2017’ கால்பந்துப் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியன் ஏரோஸ் அணியை டிரா செய்தது சென்னை சிட்டி அணி.
தேசிய அளவிலான இந்த கால்பந்துப் போட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள தமிழக அணியான சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணி ஏற்கெனவே நடைபெற்ற 11 ஆட்டங்களில் இரு ஆட்டங்களில் வெற்றியும், 6 ஆட்டங்களில் தோல்வியும் அடைந்துள்ளது. 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் 9-வது இடத்தில் உள்ள சென்னை சிட்டி அணியும், 8-வது இடத்தில் உள்ள டெல்லி இந்தியன் ஏரோஸ் அணியும் கோவை நேரு விளையாட்டு அரங்கில் மோதின.
தொடர்ந்து வெற்றிகளை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ள இரு அணிகளுமே, வெற்றி பெறுவதற்காக பெரிதும் போராடின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுமே விறுவிறுப்பாக ஆடின. எனினும் யாரும் கோல் போடவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்தில் சென்னை சிட்டி அணிக்கு கோல் போட பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்ததால், கோல் போடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த அணியின் ஜீன் மைக்கேல் ஜோக்கியம் (பிரான்ஸ்), கோல் போட கிடைத்த 3 சந்தர்ப்பங்களையும் தவறவிட்டார். இதனால் மைதானத்தில் கூடியிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றத்துக்குள்ளானார்கள்.
இதற்கிடையே விதிமுறையை மீறியதாக சென்னை சிட்டி அணியின் ஹென்றி மோன்சங்குக்கு சிவப்பு கார்டு காண்பிக்கப்பட்டது. அப்போது இரு தரப்பு வீரர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியன் ஏரோஸ் அணியைச் சேர்ந்த இருவருக்கு மஞ்சள் கார்டு காண்பித்து, எச்சரிக்கை செய்யப்பட்டது. தொடர்ந்து சிவப்பு கார்டு காண்பிக்கப்பட்ட ஹென்றி மோன்சங் மைதானத்திலிருந்து வெளியேறினார்.
கடைசி 15 நிமிடங்களில் சென்னை சிட்டி அணியினர் 10 வீரர்களுடன் மட்டுமே விளையாடினர். கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டபோதும் எந்த அணியும் கோல் போடாததால், ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. டெல்லி இந்தியன் ஏரோஸ் அணியின் கோல்கீப்பர் பிரப்சுகன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago