ODI WC 2023 | ஆப்கான் வீரர்கள் ‘லுங்கி டான்ஸ்’- பேருந்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!

By ஆர்.முத்துக்குமார்

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்திலிருந்து விடுதிக்கு பேருந்தில் திரும்பிய போது லுங்கி டான்ஸ் ஆடி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) அணியினரின் சாப்பாட்டு அறையில் இருந்து கொண்டாட்டக் காட்சியை பகிர்ந்துள்ளது, நடந்து வரும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் போது அங்கு அவர்கள் குதித்து நடனமாடும்போது பாத்திரங்களை இசைக்கருவிகளாகப் பயன்படுத்துவதைக் காணலாம்.

1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தானை ஒருநாள் தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் முதல் முறையாக வீழ்த்தியது. சமீபத்தில் இந்தியா ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் முன்பாக தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலில் பேட் செய்யத் தீர்மானித்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 282 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக பாபர் 74 ரன்களும், அப்துல்லா ஷபிக் 58 ரன்களும் எடுத்தனர். இடது கை சைனமேன் பவுலர் நூர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது நபி படு டைட்டாக வீசினார்.

பதிலுக்கு, ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களான இப்ராஹிம் சத்ரான் (87) மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் (65) ஆகியோர் சதம் விளாசி ஆதிக்கம் செலுத்தினர். 49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை வெற்றிகரமாகத் துரத்தியது ஆப்கான்.

இப்போது ஆப்கானிஸ்தானுக்கு 6 நாட்கள் ஓய்வு, பிறகு 30ம் தேதி இலங்கையை எதிர்த்து ஆடுகின்றனர், இலங்கைக்கு சிக்கல்தான்.

Since I can't post my video of dancing, here is a fun one from our #Atalan. But rest assured, I danced with joy and will continue dancing for days to come, celebrating this sweet victory. Dance your hearts out, our heroes. You deserve all the happiness. Mashallah #AFGvPAK pic.twitter.com/xaXM5x7MYf

— Wazhma Ayoubi

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE