சென்னை: நடப்பு உலக கோப்பை தொடரின் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 282 ரன்களை சேர்த்துள்ளது.
ஐசிசி உலக கோப்பையின் 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் 10 ஓவர்களில் விக்கெட் விழாமல் பாட்னர்ஷிப் அமைத்த அப்துல்லா ஷபிக், இமாம்-உல்-ஹக்கை, 11வது ஓவரில் அஸ்மத்துல்லா உமர்சாய் பிரித்தார். இதில் இமாம்- உல்- ஹக் 17 ரன்களில் விக்கெட்டானார். அப்துல்லா ஷபிக் சிறப்பாக ஆடி 58 ரன்களைச் சேர்த்துவிட்டு கிளம்பினார்.
ரிஸ்வான் நிலைத்து ஆடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 8 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். ஒருபுறம் கேப்டன் பாபர் அஸம் நிலைத்து ஆடி 74 ரன்களைச் சேர்த்தார். 42 ஓவருக்கு மேல் கூட்டணி அமைத்த ஷதாப்கான் - இப்திகார் அகமது இணைந்து ரன்களைச் சேர்த்தாலும், கடைசி ஓவரில் இருவரும் 40 ரன்களில் விக்கெட்டான நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 282 ரன்களைச் சேர்த்தது.
ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும், முஹம்மது நபி, முஹம்மது உமர்சய் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago