ஆஸ்திரேலியாவில் நடந்து வந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பல முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய வோஸ்னியாக்கி முதல் முறையாகப் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் மெல்போர்னில் நடந்து வருகிறது.மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்றும் நடந்த இறுதி ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கியும், தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ரோமானிய வீராங்கனை சிமோனா ஹாலப்பும் களம் கண்டனர்.
இருவரும் இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ருசித்ததில்லை என்பதால் பெரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சிமானோ ஹாலப்பை 7-6 (7/5), 3-6, 6-4 என்ற செட்களில் போராடி வீழ்த்தி சாம்பியன் பட்டதைத் தனதாக்கினார் கரோலின் வோஸ்னியாக்கி.
ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை வென்றவுடன், வோஸ்னியாக்கி ஆனந்தப் பெருக்கில் கண்ணீர்விட்டு அழுதார். இருவருக்கும் இடையிலான இந்த ஆட்டம் 2 மணிநேரம் 49 நிமிடங்கள் நீடித்தது.
டபில்யு.டி.ஏ. எனச் சொல்லப்படும் உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்த வோஸ்னியாக்கியால் இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக்கூட வெல்ல முடியாத குறை இருந்துவந்தது. கடந்த 2009, 2014-ம் ஆண்டு யு.எஸ்.ஓபன் பைனல் வரை வந்த வோஸ்னியாக்கி கோப்பையைத் தவறவிட்டார்.
வோஸ்னியாக்கிக்கும், சிமோனா ஹாலப்புக்கும் இது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 3-வது இறுதிப்போட்டி என்கிறபோதிலும், இதில் வெற்றி மங்கையாக வோஸ்னியாக்கி மட்டுமே ஜொலித்துள்ளார்.
போட்டியின் தொடக்கத்தில் இருந்த இருவரும் மிகவும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். இதனால் முதல் செட் 7-5 கணக்கில் டைபிரேக்கர் முறைக்கு வந்து, அதை வோஸ்னியாக்கி கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டில் சுதாரித்த ஹாலப், வோஸ்னியாக்கியை எளிதாக சாய்த்து அதை தனதாக்கினார்.
வெற்றியாளரை முடிவு செய்யும் 3-வது செட்டில் இருவரும் கடுமையாக மோதினர். ஆனால், பிரேக் புள்ளிகளை எளிதாகப் பெற்றதாலும், ஏஸ்களை வீசி திணறடித்ததாலும் 4-6 என எளிதாகக் கைப்பற்றினார் வோஸ்னியாக்கி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago