கத்தார்: கத்தாரில் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தத் தொடரின் 7-வது சுற்றில் உலக சாம்பியனும், முதல் நிலை வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார் இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி.
இதில் 40-வது காய் நகர்த்தலின் போது கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றார். இதன் மூலம் கிளாசிக் போட்டியில் கார்ல்சனை வீழ்த்திய 3-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திகேயன் முரளி. இதற்கு முன்னர் ஹரி கிருஷ்ணா, விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரும் கிளாசிக்கல் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உள்ளனர்.
7 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் கார்த்திகேயன் முரளி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தை 5 பேருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்திய கிராண்ட் மாஸ்டர்களான நாராயணன், அர்ஜூன் எரிகைசி, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ், யாகுபோயேவ் நோடிர்பெக், ரஷ்யாவின் டேவிட் பரவ்யன் ஆகியோரும் தலா 5.5 புள்ளிகளை பெற்றுள்ளனர். இந்தத் தொடரில் இன்னும் இரு சுற்றுகள் மீதம் உள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago