சென்னை: முதலாவது சப்-ஜூனியர் தென் மண்டல ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இதில் மகளிர் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு - தெலங்கானா அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு மகளிர் அணி 18-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கே.பிரியதர்ஷினி 10 கோல்கள் அடித்தார். அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் எஸ்.சுவாதி4 கோல்கள் அடித்தார்.
மற்ற ஆட்டங்களில் ஹாக்கி கர்நாடகா 12-0 என்ற கோல் கணக்கில் புதுச்சேரியையும், ஆந்திரா 11-2 என்ற கோல் கணக்கில் கேரளாவையும் வீழ்த்தின. ஆடவர் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-தெலங்கானா அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு 4-0என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கேப்டன் சுகுமார் 2 கோல்களும் அதிபன், ரஞ்ஜித்ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். மற்றஆட்டங்களில் கர்நாடகா 5-0 என்ற கோல் கணக்கில் புதுச்சேரியையும், ஆந்திரா 3-2 என்ற கோல் கணக்கில் கேரளாவையும் தோற்கடித்தன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago