India vs Pakistan @ ODI WC 2023 | இரு விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் நிதான ஆட்டம்!

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 25 ஓவர்களில் 125 ரன்களைச் சேர்த்துள்ளது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 12-ஆவது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பாகிஸ்தானின் ஓப்பனர்களாக அப்துல்லா ஷபிக், இமாம்-உல்-ஹக் களமிறங்கினர். பொறுமையாக ஆட்டத்தை தொடங்கியவர்கள், 7-ஆவது ஓவரில் ஆளுக்கு 18 ரன்களைச் சேர்த்த நிலையில் அணியின் ஸ்கோர் 37 ஆக இருந்தது.

8-ஆவது ஓவரில் இந்த பார்ட்னர்ஷிப் உடைக்கப்பட்டது. முஹம்மது சிராஜ் வீசிய பந்தில் முஹம்மது ஷபிக் எல்பிடபள்யூ முறையில் அவுட்டாகி 20 ரன்களில் வெளியேறினார். அடுத்து களத்துக்கு வந்தார் கேப்டன் பாபர் அஸம். 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் 49 ரன்களைச் சேர்ந்திருந்தது. இந்த ஆண்டில் பாகிஸ்தான் விளையாடிய 18 ஒருநாள் போட்டிகளில் பவர் ப்ளேயில் அந்த அணி சார்பில் யாரும் சிக்சர்கள் விளாசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6 ஃபோர்களை விளாசி 36 ரன்களுடன் களமாடிக்கொண்டிருந்த இமாம்-உல்-ஹக்கின் விக்கெட்டை 13-ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா கைப்பற்றியது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல். அவரைத் தொடர்ந்து பாபர் அஸம் - முகமது ரிஸ்வான் பாட்னர் ஷிப் அமைத்தனர்.

இருவரும் சிறப்பான ஆட்டக்காரர்கள் என்பதால் அவர்களை பிரிக்க இந்திய பவுலர்கள் போராடி வருகின்றனர். 25 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 125 ரன்களைச் சேர்த்து விளையாடி வருகிறது. பாபர் அஸம் 35 ரன்களுடனும், ரிஸ்வான் 33 ரன்களுடனும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். இந்திய அணி தரப்பில் முஹம்மது சிராஜ், ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்