“முடிவுகளை பார்ப்பது இல்லை” - இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா

By செய்திப்பிரிவு

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 272 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதில் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்து வீச்சு முக்கிய பங்குவகித்தது. அவர், 10 ஓவர்கள் வீசி 39 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டி முடிவடைந்ததும் பும்ரா கூறும்போது, “நான் முடிவுகளை எதிர்பார்த்து பந்துவீசுவதில்லை. 4 விக்கெட்டுகளை எடுத்து விட்டதால் மட்டும் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று அர்த்தம் ஆகாது. 4 விக்கெட்டுகளை எடுத்ததால் நான் பெரிதாக எதனையும் சாதித்து விட்டேன் என்றும் கிடையாது. தொடர்ந்து சிறப்பாக பந்துவீசுவதில் கவனம் செலுத்துகிறேன். அதுதான் மிகவும் முக்கியம். ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை கணித்து அதற்கேற்ப பந்துவீசுகிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்