அகமதாபாத் புறப்பட்டார் கில்!

By செய்திப்பிரிவு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு அகமதாபாத் சென்றடைந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. சென்னையில் உள்ள ஓட்டலில் தங்கியபடி சிகிச்சை பெற்று வந்த ஷுப்மன் கில்லுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னர் திங்கள் கிழமை மாலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், மீண்டும் ஓட்டலுக்கு திரும்பினார்.

இந்நிலையில் காய்ச்சலில் இருந்து சீராக மீண்டு வரும் ஷுப்மன் கில் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு அகமதாபாத் சென்றடைந்தார். இங்குள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 14-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் ஷுப்மன் கில் களமிறங்குவது சந்தேகம்தான். இருப்பினும் 19-ம் தேதி புனேவில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தில் ஷுப்மன் கில் களமிறங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE