வெலிங்டனில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி தன் முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
59/0 என்ற நிலையிலிருந்து நீல் வாக்னரின் அபாரமான இடது கை வேகப்பந்து வீச்சுக்கு அடுத்த 75 ரன்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்குச் சுருண்டது மே.இ.தீவுகள். நீல் வாக்னர் 14.4 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 39 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைச் சாய்த்தார். மே.இ.தீவுகள் அணியில் போவல் மட்டுமே அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்திருந்தார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் நியூஸிலாந்து அணி தன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் எடுத்துள்ளது. ராவல் 29 ரன்களுடனும், டெய்லர் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். லாதம் (37), கேப்டன் வில்லியம்சன் (1) ஆகியோரை முறையே ஹோல்டர் மற்றும் ரோச் வீழ்த்தினர்.
மிக அருமையான ஸ்விங் பவுலர்களைக் கொண்ட நியூஸிலாந்து அணி டாஸ் வென்று முதலில் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைத்தது. தொடக்க வீரர்கள் பிராத்வெய்ட், பொவெல் மிக அருமையான தடுப்பாட்ட உத்தியக் கடைபிடித்து போல்ட், ஹென்றி ஆகியோரை சிறப்பாகக் கையாண்டு 59 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.
இதனையடுத்து நீல் வாக்னர் சரமாரியாக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசத் தொடங்கினார். ஷார்ட் லெக், லெக் கல்லியுடன் ஃபைன் லெக், ஸ்கொயர் லெக் பீல்டர்களை சற்றே டீப்பில் நகர்த்தினார் கேன் வில்லியம்சன். பிராத்வெய்ட் சவாலைச் சந்தித்தார் ஒரு டாப் எட்ஜ் சிக்ஸும் பறந்தது. வாக்னரோ விடாமல் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து சரமாரியாக விலா எலும்புக்கு பவுன்சர்களை வீசித்தள்ளினார். ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் ஒரு பந்தை தடுத்தாடினார் பிராத்வெய்ட் ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனது.
உணவு இடைவேளைக்கு முன்பாக டிரெண்ட் போல்ட்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீச அது அவ்வளவாக எழும்பவில்லை, இதனை ஆடாமல் விட முடிவெடுத்தார் போவெல் ஆனால் பந்து கிளவ்வில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.
ஷிம்ரன் ஹெட்மையர் 3 அழகான பவுண்டரிகளை அடித்து 13 ரன்கள் எடுத்த நிலையில் வாக்னரின் ஷார்ட் பிட்ச் பந்திலிருந்து விலக முடியாமல் 2-வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். உணவு இடைவேளையின் போது மே.இ.தீவுகள் 79/3 என்று இருந்தது.
உணவு இடைவேளைக்குப் பிறகு மே.இ.தீவுகளின் புதிய சுவர் ஷேய் ஹோப், வாக்னரின் லெக் திசை ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆடும் முயற்சியில் கிளவ்வில் வாங்கி விக்கெட் கீப்பரிடம் லெக் திசையில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
இந்த ஷார்ட் பிட்ச் சரமாரி தாக்குதலை எதிர்கொள்ள புதிய வீரர் சுனில் ஆம்பிரிஸ் கிரீசிற்குள் நின்றார், பந்தையும் பைன் லெக் திசையில் அடித்தார், ஆனால் பின்னங்கால் ஸ்டம்பைத்தொந்தரவு செய்ய ஹிட் விக்கெட் ஆனார், வாக்னர் மீண்டும் அசத்தல்.
எப்படியாவது இந்த சரமாரி ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த ராஸ்டன் சேஸ், லெக் திசையில் சற்றே ஒதுங்கி நின்று பார்த்தார், ஆனால் என்ன ஆனது, லெக் திசை பந்து ஒன்றை லெக் கல்லியில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷார்ட் பிட்ச் அச்சுறுத்தலில் இறங்கிய கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு ஒரு யார்க்கரை வீசினார் வாக்னர், வேறு வழியில்லை பவுல்டு ஆகி வெளியேறினார் ஹோல்டர். 59/0 பிறகு 75/1 என்ற நிலையிலிருந்து 105/9 என்று சரிந்தது மே.இ.தீவுகள்.
கடைசியில் ஷனான் கேப்ரியல், கிமார் ரோச் இணைந்து 25 ரன்களைச் சேர்த்தனர், வாக்னர் கேப்ரியலை வீழ்த்தி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மே.இ.தீவுகள் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆட்ட முடிவில் நியூஸிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago