ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்றது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஹாக்கி இறுதிப்போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. 5 - 1 என்று கோல் கணக்கில் ஜப்பானை எளிதில் வென்றது இந்திய அணி. தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. அதேநேரம், ஹாக்கியில் பதக்கம் வென்றதன் மூலம் ஹாங்சோ ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 22-வது தங்கம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியா பதக்க பட்டியலில் 4-ம் இடத்தை பெற்றுளளது.
முன்னதாக, இன்று நடந்த வில்வித்தை போட்டியின் பெண்கள் ரிகர்வ் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அங்கிதா பகத், பஜன்கவுர் மற்றும் சிம்ரன்ஜித் கவுர் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். அதேபோல் ஆடவர் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றது. அதானு தாஸ், துஷார் ஷெல்கே, தீரஜ் பொம்மதேவரா ஆகியோர் அடங்கிய இந்திய அணி கொரியாவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்த ரிகர்வ் பிரிவில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் அரையிறுதியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சீன வீரருடன் மோதி தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
» Asian Games 2023 | வரலாற்றில் முதல் முறையாக 100 பதக்கங்களை கடந்தது இந்தியா!
» ODI WC 2023 | பவுலிங் எனும் கலை அழியும் அபாயம் - விதிகளைத் திருத்துமா ஐசிசி?
செபாக் டக்ரோ விளையாட்டின் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
மல்யுத்தத்தில் 62 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சோனம் வெண்கலம் வென்றார். இதேபோல், 76 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் கிரண் வெண்கலம் வென்றார்.
இதனிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்தியா 100 பதக்கங்களைக் கடந்து புதிய வரலாறு படைப்பதும் கவனிக்கத்தக்க்து.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago