ODI WC 2023 | மழையால் இந்தியா - நெதர்லாந்து பயிற்சி ஆட்டம் ரத்து

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி இந்தியா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. இந்நிலையில், இந்தியா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் இன்று கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இன்று காலை முதலே திருவனந்தபுரத்தில் மழை பெய்துவந்த நிலையில் ஆட்டம் தொடங்கவிருந்த மதியம் நேரத்திலும் நல்ல பெய்தது.

இதனால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. எனினும், மழை நிற்பதாக தெரியவில்லை. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆடுகளத்தை ஆய்வு செய்த நடுவர்கள் போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர். டாஸ் கூட வீசப்படமால் போட்டி கைவிடப்பட்டது.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை குவாஹாட்டி மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டமும் மழை காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை போட்டிகள் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி வரவிருக்கும் 8-ம் தேதி ஆஸ்திரேலிய அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE