ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவானின் ‘அதிரடி’களை மறக்குமா நெஞ்சம்?

By ஆர்.முத்துக்குமார்

2015 மற்றும் 2019 இரு உலகக் கோப்பை தொடர்களிலும், நிறைய ஒருநாள் போட்டிகளிலும் இந்திய பேட்டிங்கில் எண்ணற்ற பங்களிப்பு செய்த அதிரடி தொடக்க வீரர் ஷிகர் தவான், வெகு விரைவில் மக்கள் மனதிலிருந்து அகன்றுவிட்டார். கிரிக்கெட்டை தொடர்ந்து பார்ப்பவர்கள், அதன் நுட்பங்களை அறிந்தவர்கள், வரலாற்று உணர்வு உள்ளவர்கள் முந்தைய வீரர்களை நினைவில் கொள்வார்கள். அந்த வகையில் இன்னும் நினைவில் நிற்பவரே ஷிகர் தவான்.

சேவாக் ஓய்வு பெற்ற பிறகே அவரது இடத்துக்கு அவரைப்போலவே ஒரு வீரர் தேவை என்ற நிலையில் இடது கை வீரராகவும் இந்திய அணியில் கண்டெடுக்கப்பட்டார். டெஸ்ட் போட்டியில் அறிமுகப் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குறைந்த பந்துகளில் 187 ரன்களை விளாசி அறிமுக அதிக ஸ்கோர் சாதனையை தன் வசம் வைத்திருப்பவர். 7 சதங்கள் 5 அரைசதங்களுடன் 34 டெஸ்ட்களில் 2315 ரன்கள் 40.61 என்ற நல்ல சராசரியுடன் டெஸ்ட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது ஒரு புரியாத புதிர்தான்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 167 போட்டிகளில் 6793 ரன்களை எடுத்துள்ளார் தவான். 143 அதிகபட்ச ஸ்கோர். சராசரி 44.11. ஸ்ட்ரைக் ரேட் 91. சதங்கள் 17, அரைசதங்கள் 39. இவர் இன்னும் சில ஒருநாள் போட்டிகளில் ஆட தகுதி உடையவர்தான். வயது 37. ஆனாலும் கூட இவர் நம்பகமான ஒருநாள் வீரர். 2010-ம் ஆண்டு விசாகப்பட்டணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டி வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் முதல் போட்டி போல் கிராண்டாக அமையவில்லை. அவர் டக் அவுட் ஆனார். அதுவும் கிளீன்பவுல்டு. அடுத்த மேட்சில் 51 ரன்கள் எடுத்தார். ஆனால் இவரது மகாத்மியம், 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில்தான் தெரியவந்தது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கார்டிஃபில் 114 ரன்களையும், மே.இ.தீவுகளுக்கு எதிராக ஓவலில் 102 ரன்களையும் எடுத்தார். இடையில் 2 அரைசதங்களை எடுத்து ஜிம்பாப்வேக்கு எதிராக ஹராரேயில் 116 ரன்களை விளாசினார். பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 95, 100, 60 என்று ஒருநாள் தொடரில் பங்களிப்பு செய்தது பெரிய விஷயம்.

ஆனால், ஷிகர் தவானை உலகுக்கு அடையாளம் காட்டிய இன்னிங்ஸ் என்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2013-ல் நடந்த 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஜெய்பூர் போட்டியாகும். ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 359/5 என்று இமாலய இலக்கை நிர்ணயித்தது. இதற்கு முன்பாக இந்தியா இவ்வளவு பெரிய இலக்கை வெற்றிகரமாக விரட்டியதேயில்லை. 2003 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இதே இலக்குதான். ஆனால் இந்திய அணி 39 ஓவர்களில் 234 ரன்களுக்குச் சுருண்டது. ஆனால், இம்முறை விடுவதாக இல்லை. இந்திய அணி 6.3 ஓவர்கள் மீதம் வைத்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து அபார அதிசய வெற்றியைப் பெற்றது.

விராட் கோலி இந்தப் போட்டியில்தான் 52 பந்துகளில் சதமடித்து சாதனை புரிந்தார். ரோஹித் சர்மாவுடன் தொடக்கத்தில் இறங்கிய ஷிகர் தவான் 86 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 95 ரன்களை விளாச, இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்காக 26 ஓவர்களில் 176 ரன்களைச் சேர்த்து கொடுத்த அடித்தளம்தான், விராட் கோலியின் அதிரடியின் முன்னோடி ஆட்டமாக அமைந்தது. ரோகித் சர்மா 141 ரன்களில் நாட் அவுட். இந்தியா 362/1 என்று வென்றது.

அதிலிருந்து ஷிகர் தவான் திரும்பிப் பார்க்கவில்லை. பிரமாதமாக ஆடினார். நம்பகமான தொடக்க வீரராக இருந்தார். சுயநல மைல்கல்லை எட்டுவதற்காக ஆடாதவர். அணிக்காக ரன் ரேட்டை தொய்ய விடாமல் ஆடக்கூடிய மிகச்சில வீரர்களில் இவரும் ஒருவர். இவர் 5,000 ரன்களை எட்டிய போது இந்த வடிவத்தின் வரலாற்றில் 8 வீரர்கள்தான் 5000 ரன்கள், 40 சராசரி, 90+ ஸ்ட்ரைக் ரேட் என்று வைத்திருந்தனர். அதில் ஷிகர் தவானும் இணைந்தார்.

இவர் கடந்த டிசம்பரில் சட்டோகிராமில் நடந்த ஒருநாள் போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் ஆடவில்லை. இந்தப் போட்டியில்தான் இஷான் கிஷான் விளாசு விளாசென்று விளாசி 133 பந்துகளில் 210 ரன்களை விளாசவும் அனைவரும் ஷிகர் தவான் இனி எதற்கு என்று நினைத்து விட்டனர்.

2013-ல் இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் அழைக்கப்பட்ட ஷிகர் தவான் வெளுத்து வாங்கினார். 28 போட்டிகளில் 1162 ரன்கள் 50 சராசரி, ஸ்ட்ரைக் ரேட் 98. இந்த சாதனையை இப்போது கன்னாபின்னாவென்று பார்மில் இருக்கும் சுப்மன் கில்லினால் கூட உடைக்க முடியவில்லை. இந்த 2013 முதல் 2019 உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மாவின் சிறந்த தொடக்க பார்ட்னராகத் திகழ்ந்தார் தவான். அதாவது எப்படி ஹெய்டன், கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங் இருந்தார்களோ அதற்கு சற்றொப்ப இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி மூவர் கூட...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்