வக்கார் யூனிஸை முந்தினார் சிராஜ்!

By செய்திப்பிரிவு

இலங்கைக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 21 ரன்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தி ஒருநாள் போட்டிகளில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார் முகமது சிராஜ். மேலும் ஆசியக் கோப்பை போட்டியில் வக்கார் யூனிஸின் சிறப்பான பந்துவீச்சையும் (6வி/26) முந்தினார்.

ஒருநாள் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சு வரிசையில் முதல் இடத்தில் ஸ்டூவர்ட் பின்னியும் (6வி/4), 2-வது இடத்தில் அனில் கும்ப்ளேவும் (6வி/12), 3-வது இடத்தில் ஜஸ்பிரீத் பும்ராவும் (6வி/19), 4-வது இடத்தில் முகமது சிராஜும் (6வி/21) உள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சு வரிசையில் 4-வது இடத்தையும் சிராஜ் பிடித்துள்ளார். ஒரே ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை
சிராஜ் பெற்றுள்ளார்.

மேலும், ஒருநாள் தொடர்களில் இந்திய அணிக்காக (2002-ம் ஆண்டு முதல்) முதல் 10 ஓவர்களில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் சிராஜ் முதலிடத்தில் உள்ளார். முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் சிராஜ். இதற்கு அடுத்த இடங்களில் நாத், புவனேஸ்வர், பும்ரா, சிராஜ் ஆகியோர் உள்ளனர். இவர்கள் முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

இந்தப் போட்டியில் பந்துவீச்சில் பல சாதனைகளை படைத்துள்ள சிராஜ், இலங்கை அணியை சரிவுக்குள்ளாக்கியதோடு, அணிக்கு கோப்பையையும் பெற்றுத் தந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்