ஷிவம் மாவி காயம்: ஆசிய விளையாட்டு அணியில் ஆகாஷ் தீப் சேர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடவிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிவம் மாவி காயம் காரணமாக விலகியுள்ளார். இதைடுத்து ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ஆகாஷ் தீப் இணைந்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வரும் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த தொடரில் இந்திய ஆடவர், மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிக்கு கலந்து கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. அணி விவரங்களையும் பிசிசிஐ அளித்திருந்தது.

இந்த தொடருக்கான இந்திய ஆண்கள் அணிக்கு ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறும் சமயத்தில் உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதால் இளம் வீரர்களை கொண்ட இந்திய ஆடவர் அணியே சீனாவுக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், இந்திய அணி இடம் பிடித்திருந்த இளம் வீரரான ஷிவம் மாவி காயம் காரணமாக விலகி உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் தீப்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்