லக்னோ: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் மொராக்கோவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலக குரூப்-1 பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள மைதானத்தில் நேற்றுமுன்தினம் டேவிஸ் கோப்பை போட்டி தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற 2 ஆட்டங்களில் இந்தியா ஒரு ஆட்டத்திலும், மொராக்கோ ஒரு ஆட்டத்திலும் வென்றது. இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-யூகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-1 என்ற கணக்கில் எலியட் பென்செட்ரிட்-யூனஸ் லலாமி ஜோடியை வீழ்த்தியது.
மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல் 6-3, 6-3 என்ற கணக்கில் யாசின் டிலிமியையும், மற்றொரு ஆட்டத்தில் திக்விஜய் பிரதாப் சிங் 6-1, 5-7, 10-6 என்ற கணக்கில் வாலிட் அஹுடாவையும் தோற்கடித்தனர். இதையடுத்து 4-1என்ற கணக்கில் இந்தியா, மொராக்கோவை வென்று உலக குரூப்-1 பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago