டேவிஸ் கோப்பை டென்னிஸ் - சுமித் நாகல் அசத்தல் வெற்றி

By செய்திப்பிரிவு

லக்னோ: மொராக்கோவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் முதல் நாள் ஆட்டத்தை இந்திய அணி 1-1 என சமநிலையில் முடித்தது.

லக்னோவில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், மொராக்கோவின் யாசின் டிலிமியுடன் மோதினார். இதில் டை பிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை சசிகுமார் முகுந்த் 7-6 (4) என கைப்பற்றினார்.

2-வது செட்டில் மீண்டு வந்த யாசின் 7-5 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். கடைசி செட்டில் யாசின் 4-1 என முன்னிலை வகித்த நிலையில் சசிகுமார் முகுந்த் தசைபிடிப்பு காரணமாக வெளியேறினார். இதனால் யாசின் டிலிமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

2-வது ஆட்டத்தில் சுமித் நாகல், ஆடம் மவுன்ந்திரை எதிர்கொண்டார். இதில் சுமில் நாகல் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இரு அணிகள் இடையிலான மோதல் 1-1 என சமநிலையை அடைந்துள்ளது. கடைசி நாளான இன்று இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி ஜோடியானது மொராக்கோவின் எலியட் பெஞ்செட்ரிட், யூனெஸ் லலாமி லாரூசி ஜோடியுடன் மோதுகிறது. ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் சுமித் நாகல், யாசின் டிலிமியுடன் மோதுகிறார். மற்றொரு ஆட்டத்தில் சசிகுமார் முகுந்த், ஆடம் மவுன்ந்திரை சந்திக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்