டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா - மொராக்கோ இன்று மோதல்

By செய்திப்பிரிவு

லக்னோ: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்தியா - மொராக்கோ அணிகள் இன்று மோதுகின்றன.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் உலக குரூப் 2 பிளே ஆஃப் ஆட்டத்தில் இந்தியா - மொராக்கோ அணிகள் இன்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விஜயந்த் காந்த் மினி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டிக்கான இந்திய அணியில் சுமித் நாகல், சசிகுமார் முகுந்த், திக்விஜய் பிரதாப் சிங், யூகி பாம்ப்ரி, ரோஹன் போபண்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மொராக்கோ அணியில் எலியட் பெஞ்செட்ரிட், யாசின் டிலிமி, ஆடம் மவுண்டர், வலீத் அஹூதா ஆகியோர் களமிறங்குகின்றனர்.

இந்த போட்டி காலை 12 மணி அளவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிக வெயில் காரணமாக போட்டி தொடங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி 12 மணிக்கு பதிலாக பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் உத்தரபிரதேசத்தில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. ரோஹன் போபண்ணா பங்கேற்கும் கடைசி டேவிஸ் கோப்பை தொடராக இது இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. இரு நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரின் ஆட்டங்களை தூர்தர்ஷன் மற்றும் சோனி ஸ்போர்ட்ஸ் சானல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE