மாடர்ன் டே கிரிக்கெட்டின் ‘Fab 4’ வீரர்களாக அறியப்படுகிறார்கள் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன். இவர்கள் நால்வரும் தங்கள் அணிகளுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ரன் குவித்து வரும் மகத்தான பேட்ஸ்மேன்கள்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த தொடருக்கான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளில் இவர்கள் நான்கு பேரும் இடம் பிடித்துள்ளனர். 30 வயதினை கடந்துள்ள இவர்கள் நால்வரும் ஒரே நேரத்தில் பங்கேற்று விளையாடும் கடைசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடராக இது இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அடுத்த உலகக் கோப்பை தொடர் 2027-ல் நடைபெறும். அப்போது இவர்கள் 30-களின் பிற்பாதியில் இருப்பார்கள். அதனால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இவர்களது பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை யாரும் கணிக்க முடியாது. அதிக ரன்கள் மற்றும் சாதனைகளை படைத்த வீரர்களாக இவர்கள் உள்ளனர். இந்த சூழலில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த மகத்தான வீரர்களின் பங்களிப்பு குறித்து பார்ப்போம்.
விராட் கோலி: மூன்று வடிவ கிரிக்கெட்டில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி. ஃபிட்னஸில் தீவிர ஆர்வம் கொண்டவர். அதுவே இவரது சக்ஸஸுக்கு காரணம் என்றும் சொல்லலாம். இந்திய அணிக்காக 279 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13,027 ரன்கள் குவித்துள்ளார். 47 சதம் மற்றும் 65 அரைசதம் பதிவு செய்துள்ளார். இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்களில் 2-வது இடத்தில் உள்ளார். கடந்த 2011 முதல் 26 உலகக் கோப்பை போட்டிகளில் கோலி விளையாடி 1,030 ரன்கள் எடுத்துள்ளார். 2 சதம் மற்றும் 6 அரைசதம் பதிவு செய்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித்: டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என ஸ்மித் போற்றப்படுகிறார். ஆஸ்திரேலிய அணிக்காக 142 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4,939 ரன்கள் குவித்துள்ளார். 12 சதம் பதிவு செய்துள்ளார். 24 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார். 2015 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான அரையிறுதில் சதம் பதிவு செய்திருந்தார். அந்த தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக அரைசதம் பதிவு செய்திருந்தார். நடப்பு ஆண்டில் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.
ஜோ ரூட்: 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,217 ரன்கள் குவித்துள்ளார் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட். 150 இன்னிங்ஸில் 16 சதம் மற்றும் 36 அரைசதம் பதிவு செய்துள்ளார். கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் 11 இன்னிங்ஸ் விளையாடி 556 ரன்கள் எடுத்திருந்தார். 2 சதம் மற்றும் 3 அரைசதம் அந்த தொடரில் பதிவு செய்தார்.
வில்லியம்சன்: நியூஸிலாந்து அணிக்காக 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,554 ரன்கள் எடுத்துள்ளார் கேன் வில்லியம்சன். 13 சதம் மற்றும் 42 அரைசதம் பதிவு செய்துள்ளார். 23 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் 10 போட்டிகளில் 578 ரன்கள் எடுத்திருந்தார். தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago