ஆசிய விளையாட்டுப் போட்டி | மாற்றம் செய்யப்பட்ட இந்திய கால்பந்து அணி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்திய கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 17 வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்த அணியை சுனில் சேத்ரி தலைமை தாங்கி வழிநடத்துகிறார்.

சீனாவின் ஹாங்சோவ் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், வரும் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய கால்பந்து அணி கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்) இதை அறிவித்தது. இந்த சூழலில் தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. இந்த அணியில் சந்தேஷ் ஜிங்கன், குருபிரீத் சிங் சாந்து இடம்பெறவில்லை. இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட அணியில் இடம் பெற்றிருந்தனர். அதே போல முன்பு அறிவிக்கப்படட் அணியில் இடம் பெற்றிருந்த 11 வீரர்கள் தற்போதைய அணியில் இல்லை.

கடந்த 2018-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் கால்பந்து பிரிவுக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை. இதைத் தொடர்ந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணி விளையாடவுள்ளது.

இந்திய அணி விவரம்: குர்மீத் சிங், தீரஜ் சிங், சுமித் ரதி, நரேந்தர் கஹ்லோட், அமர்ஜித் சிங், சாமுவேல் ஜேம்ஸ், ராகுல் கே.பி, அப்துல் ரபீ அஞ்சுகண்டன், ஆயுஷ் தேவ், பிரைஸ் மிராண்டா, அஸ்பர் நூரானி, ரஹீம் அலி, வின்சி பாரெட்டோ, சுனில் சேத்ரி, ரோகித் தாணு, குர்கிரித் சிங், அனிகேத் ஜாதவ்.

முன்பு அறிவிக்கப்பட்ட அணி..

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE