கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை காண்பதற்கு பெருமளவிலான ரசிகர்கள் கூட்டம் வரவில்லை. இதனால் மைதான கேலரிகள் காற்று வாங்கின.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. எப்போதுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் உலகின் எந்த பகுதியில் நடைபெற்றாலும் ரசிகர்கள் கூட்டம் மைதானத்தில் நிரம்பி வழியும். ஆனால் இம்முறை வழக்கத்துக்கு மாறாக கொழும்பு மைதானத்தின் பெரும்பாலான கேலரிகள் வெறிச்சோடி கிடந்தன.
லீக் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கண்டியின் பல்லேகலேவில் மோதிய ஆட்டத்திலும் இதே நிலைமைதான் இருந்தது. கொழும்பில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு கணிசமான ரசிகர்கள் இருப்பதால் நிச்சயம் மைதான கேலரிகள் நிரம்பும் என போட்டி அமைப்பாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதே மைதானத்தில் கடந்த 2012-ம் ஆண்டு உலகக் கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது மைதானம் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்திருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. இலங்கை அணி மோதும் ஆட்டத்துக்குகூட ரசிகர்களின் வருகை குறைவாகவே உள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆன்லைன் மற்றும்கவுன்ட்டர்களில் டிக்கெட்கள் விற்பனை ஆகாமல் தேங்கி உள்ளன. டிக்கெட் விலையை குறைத்துள்ள போதிலும் ரசிகர்களின் நெரிசலை காண முடியவில்லை. மழைமுன்னறிவிப்பு மற்றும் உள்ளூர் பகுதி மக்களிடம் ஆர்வம் இல்லாதது கூட காரணமாக இருக்கலாம். இந்த நிலை மாறும் என நம்புகிறோம்” என்றார்.
மைதான கேலரிகள் காற்று வாங்கும் நிலையில் டிக்கெட்களின் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி கேலரிகளின் மேல் பகுதி டிக்கெட்டுகளின் விலை இலங்கை மதிப்பில் ஆயிரம் ரூபாயாககுறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சி மற்றும் டி கேலரிகளின் கீழ்பகுதி டிக்கெட்டுகளுக்கான கட்டணம் 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விலைகுறைப்பு சூப்பர் 4 சுற்று ஆட்டங்களுக்கு மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago