நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நிலை வீரரான ஸ்பெயின் கார்லோஸ் அல்கரஸ், 3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவுடன் மோதினார். 3 மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டேனியல் மேத்வதேவ் 7-6 (7-3), 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அல்கரஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரை இறுதியில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 47-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதினார். அமெரிக்க ஓபன் தொடர்களில் ஜோகோவிச்சுக்கு இது 100-வது ஆட்டமாக அமைந்திருந்தது. 2 மணி நேரம் 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மோதலில் ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தார். 3 முறை சாம்பியனான ஜோகோவிச் இறுதிப் போட்டியில் கால்பதிப்பது இது 10-வது முறையாகும்.
23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று குவித்துள்ள ஜோகோவிச், அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் 2021-ம் ஆண்டு சாம்பியனான டேனியல் மேத்வதேவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 2021ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்திதான் டேனியல் மேத்வதேவ் பட்டம் வென்றிருந்தார். இம்முறை இதற்கு ஜோகோவிச் பதிலடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
» கால்பந்து | பீலே சாதனையை முறியடித்தார் நெய்மர்
» பாகிஸ்தான் பந்து வீச்சில் தடுமாற்றம் ஏன்? - மனம் திறக்கும் ஷுப்மன் கில்
போபண்ணா ஜோடி தோல்வி: ஆடவருக்கான இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியானது அமெரிக்காவின் ராஜீவ் ராம், இங்கிலாந்தின் ஜோ சாலிஸ்பரி ஜோடியுடன் மோதியது. 2 மணி நேரம் ஒரு நிமிடம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போபண்ணா, எப்டன் ஜோடி 6-2, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
37 mins ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago