கார்டிஃப்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டேவன் கான்வே, டேரில் மிட்செல் ஆகியோரது அதிரடி சதத்தால் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கார்டிஃப் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது. கேப்டன் ஜாஸ் பட்லர் 68 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் விளாசினார். டேவிட் மலான் 54, பென் ஸ்டோக்ஸ் 52, லியாம் லிவிங்ஸ்டன் 52 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா 3, டிம் சவுதி 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
292 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து 45.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவன் கான்வே 121 பந்துகளில், ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 111 ரன்களும் டேரில் மிட்செல் 91 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 118 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்கள் இருவருக்குமே சர்வதேச போட்டிகளில் இது 4-வது சதமாக அமைந்தது.
3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி கூட்டாக 180 ரன்கள் சேர்த்தது. முன்னதாக வில் யங் 29, ஹென்றி நிக்கோல்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் சவுத்தாம்டனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
31 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago