ஐபிஎல்: பெங்களூரின் ஆதிக்கத்தில் வீழ்ந்தது மும்பை
டாஸ் வென்று பவுலிங்கை தேர்தெடுத்தது பெங்களூர் அணி. மும்பை அணியின் பேட்டிங்கில் ஆரம்பம் முதலே தடுமாற்றம் தெரிந்தது. ஸ்டார்க், சாஹல், திண்டா ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சை எதிர் கொள்ள முடியாமல் ஒரு புறம் விக்கெட்டுகள் சரிய, மறுபுறம் ரன்கள் சேர்க்கும் வேகம் குறைந்தது. 20 ஓவர்கள் முடிவில், மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதிகபட்சமாக, ராயுடு 35 ரன்கள் சேர்த்திருந்தார். 5 மும்பை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
எளிய இலக்கை விரட்டிய பெங்களூர் அணி பவர் ப்ளே ஓவர்கள் முடிவதற்கு முன்பே மேடிசன், விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோரை இழந்தது. ஆனாலும், களத்திலிருந்த டிவில்லியர்ஸ் மற்றும் பர்தீவ் படேல் இணை பொறுப்பாக ஆடி, ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. மேற்கொண்டு விக்கெட் இழக்காமல், பெங்களூர் அணி 17.3 ஓவர்களில் வெற்றி இலக்கைத் தொட்டது. அரைசதம் அடித்து, அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த பர்தீவ் படேல் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுவரை நடந்த இரண்டு ஆட்டங்களிலுமே மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.