13 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில்தான் இந்திய அணியின் ’கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி தனது முதல் சர்வதேசப் போட்டியில் களம் கண்டிருக்கிறார்.
இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்டிலிருந்து நீள மூடியுடன், வித்தியாசமான உடல் மொழியுடன் களமிறங்கிய அந்த வீரர்தான் இன்று இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற உச்சத்தை அடைந்தார்.
தனது ஆட்டத்தின் மூலம் மட்டுமல்லாது தனித்துவமான தலைமைத்துவம், எளிமை மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களால் கிரிக்கெட்டின் ’தலை’யாக ஏற்றுக் கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறார்.
தோனியின் 13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் சில குறிப்பிடத்தக்க சாதனைகள்:
விக்கெட் கீப்பர் ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் எடுத்தது.
50 ஆட்டங்களுக்கும் மேல் விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்களில் அதிகபட்ச சராசரி ரன் விகிதம் வைத்திருந்தது.
ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 7-வது வீரராக களமிறங்கி அதிகபட்சமாக 139 ரன்கள் குவித்தது.
ஒரு இன்னிங்ஸில் 6 பேரை அவுட்டாக்கி அதிகபட்சமாக ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர்.
ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்ச்கள் பிடித்தது உட்பட இதுவரை 250-க்கும் மேற்பட்ட கேட்ச்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஸ்டம்ப்பிங் செய்து சாதனை படைத்துள்ளார்.
20-க்கும் மேற்பட்ட தடவை ஆட்டநாயகன் விருது, ஆறுமுறை தொடர் நாயகன் விருது கேப்டனாக அதிக சிக்சர்கள் (204) அடித்தது.
மொத்தம் 331 சர்வதேசப் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர்… 2007-ல் டி-20 உலகக்கோப்பை, 2011-ல் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் மற்றும் 2013 சாம்பியன்ஸ் கோப்பையில் பட்டம் என அத்தனை சாதனைகளையும் தனது கேப்டன்ஷிப்பில் பெற்ற ஒரே கேப்டன் என்ற தனிச் சிறப்பு தோனிக்கு உண்டு.
விளையாட்டுத் துறையில் தோனியின் பணியைப் பாராட்டி ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட மேலும் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது இந்திய அணி கிரிக்கெட் அணி இளம் கேப்டன் விராத் கோலியின் தலைமையில் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஒரு அனுபவமிக்க வீரராக தோனி தனது பங்களிப்பை அணிக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் மூத்த வீரர்கள் அணியில் இருக்கும்போது எத்தகைய விமர்சனங்களை எதிர் கொள்வார்களோ அதைத்தான் தோனியும் சமீபகாலங்களில் எதிர்கொண்டு வருகிறார். ஒரு இளம் அணியில் மூத்த வீரர் ஒரு பந்து அடிக்காமல் டாட் வைத்தால் அதனை பத்து பந்துக்கு சமமாக வைத்து இவர் இன்னும் அணியில் இருக்க வேண்டுமா? என்று விமர்சிக்க விமர்சகர்கள் தயாராக இருப்பார்கள். விமர்சகர்களின் இந்த கருத்துக்கு உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை கோபமாக வீசும் வீரர்களை நாம் வரலாற்றில் பலமுறை பார்த்திருப்போம்.
இதிலிருந்துதான் தோனி வேறுபடுகிறார். தோனி தனது விமர்சகர்களுக்கு பதில் ஏதும் அளிப்பதில்லை. தன்னை விமர்சிப்பவர்களுக்கு தனது ஆட்டங்களில் மூலமே பதிலளித்து அவர்களிடமே கீரிடத்தை சூட்டிக் கொள்கிறார்.
தோனியின் கீரிடம் இன்னும் மிளிரும்.....
சமூக வலைதளங்களில், தோனி 13 ஆண்டு கால கிரிக்கெட் பயணம் குறித்து அவரது பல பதிவுகளையிட்டுள்ளனர். அவற்றுள் ஒரு வீடியோ தொகுப்பு :
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago