ஆசிய கோப்பை | சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை - வெளியேறியது ஆப்கானிஸ்தான்!

By செய்திப்பிரிவு

லாகூர்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை அணி.

37.1 ஓவர்களில் 292 ரன்கள் என்ற இலக்கை எட்டினால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் சேஸிங் செய்து வந்தது ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி 32 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 65 ரன்களும், ஹஷ்மதுல்லா ஷகிடி 59 ரன்களும் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இதேபோல், ரஹ்மத் ஷா 45 ரன்கள் சேர்த்தார். கடைசி கட்டத்தில் ரஷித் கான் அதிரடியாக ஆடி 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாலும் 1 பந்துக்கு 3 ரன்கள் தேவைப்பட, முஜீப் ரஹ்மான் மற்றும் ஃபரூக்கி அடுத்தடுத்து அவுட்டானதால் ஆல் அவுட்டாகினர்.

இதனால் ஆப்கானிஸ்தான் 289 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் வென்ற இலங்கை சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. அதேநேரம் ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான். இலங்கை சார்பில் காசுன் ரஜிதா 4 விக்கெட்கள் , துனித் வெல்லலகே, தனஞ்செய டி சில்வா தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இன்னிங்ஸில் முதலில் ஆடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது. குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி 92 ரன்களும், பதும் நிசங்கா 41 ரன்களும், அசலங்கா 36 ரன்களும் எடுத்து கைகொடுத்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் நயீன் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்