அமெரிக்க ஓபன் டென்னிஸ் | கால் இறுதியில் போபண்ணா ஜோடி

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு 3-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியானது இங்கிலாந்தின் ஜூலியன் கேஷ், ஹென்றி பாட்டன் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டன் ஜோடி 6-4, 6-7(5-7), 7-6(10-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

கலப்பு இரட்டையர் பிரிவு2-வது சுற்றில் இந்தியாவின்ரோகன் போபண்ணா, இந்தோனேஷியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடியானது 2-6, 5-7என்ற செட் கணக்கில் அமெரிக்காவின்பென் ஷெல்டன்,டெய்லர் டவுன் சென்ட்ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்