பல்லகெலே: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான குரூப் சுற்றுப் போட்டியில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது நேபாள கிரிக்கெட் அணி.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இம்முறை போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகின்றன. செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் நேபாள அணிகள் பல்லகெலேவில் தற்போது விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. நேபாள அணிக்காக குஷால் புர்ட்டெல் மற்றும் ஆசிஃப் ஷேக் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் 4.2 ஓவர்களில் அவர்கள் இருவரும் கொடுத்த 3 கேட்ச் வாய்ப்பை இந்திய அணி ஃபீல்டர்கள் நழுவ விட்டனர். இருப்பினும் ஷர்துல் தாக்குர் அவர்களது பார்ட்னர்ஷிப்பை தகர்த்தார். பின்னர் தொடர்ச்சியாக 3 விக்கெட்களை கைப்பற்றி ஜடேஜா கெத்து காட்டினார். அதன் பிறகு சீரான இடைவெளியில் நேபாளம் விக்கெட்டை இழந்தது. மழை குறுக்கீடு இருந்த காரணத்தால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது.
48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக ஆசிஃப் ஷேக் 58 ரன்கள், சொம்பல் கமி 48 ரன்கள், குஷால் புர்ட்டெல் 38 ரன்கள், திபேந்திரா ஐரீ 29 ரன்கள் மற்றும் குல்ஷன் ஜா 23 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்தனர்.
ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். குல்தீப் யாதவ், ஓவருக்கு 3.40 ரன்கள் விட்டுக்கொடுத்தார். சிராஜ் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ஷமி, ஹர்திக் மற்றும் ஷர்துல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நேபாள வீரர் சந்தீப் லமிச்சானே, ரன் அவுட் செய்யப்பட்டார். இந்திய அணி 231 ரன்கள் எடுத்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறலாம். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடிய குரூப் சுற்றுப் போட்டி மழையால் ரத்தானது. அதனால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago