ஹைதராபாத்: ராஜா நரசிம்ம ராவ் நினைவு ஐடிஎஃப் உலக ஜூனியர் டூர் (ஜே60) 18 வயதுக்குட்பட்டோர் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர், இரட்டையர் என2 பிரிவுகளிலும் மாயா ராஜேஷ்வரன் ரேவதி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டிகள் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் அஜீஸ் நகரிலுள்ள லேக் வியூவ் டென்னிஸ் அகாடெமியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. மகளிர்ஒற்றையர் இறுதிச் சுற்றுப் போட்டியில் மாயா ராஜேஷ்வரன் ரேவதியும், சவும்யா ரோண்டேவும் மோதினர். இதில் மாயா ராஜேஷ்வரன் ரேவதி 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதேபோல் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியிலும், மாயா ராஜேஷ்வரன் பட்டம் வென்றார்.
இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, ரிஷிதா ரெட்டி பாசிரெட்டி ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் துர்கான்ஷி குமார், அமோதினி நாயக் ஜோடியைச் சாய்த்தது. இதன்மூலம் மாயா ராஜேஷ்வரன் ரேவதி ஒற்றையர், இரட்டையர் என 2 பிரிவுகளிலும் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
சேஹாஜ் சிங் முதலிடம்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் சேஹாஜ் சிங் பவார் 6-7 (6), 6-2, 6-1 என்ற செட் கணக்கில் டெபாசிஷ் சாஹுவை வீழ்த்தினார். ஆடவர் இரட்டையர் பிரிவில் சமர்த் சாஹிதா-டெபாசிஷ் சாஹு ஜோடி 6-2, 6-3என்ற நேர் செட்களில் சேஹாஜ் சிங் பவார், பிரத்யக் ஷ் ஜோடியை தோற்கடித்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago