ODI WC 2023 | இந்திய அணியில் இடம்பெறுகிறார் ராகுல்? - நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (செப்டம்பர் 5) வெளியாகவுள்ளது.

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்தப்போட்டியை இந்தியா நடத்துகிறது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை வரும் 5-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) காலக்கெடு விதித்திருந்தது.

மேலும் அறிவிக்கப்பட்ட வீரர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் செப்டம்பர் 28-ம் தேதிக்குள் கடைசி நேரத்தில் மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்றும் ஐசிசி சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை இறுதி செய்யும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோஹித் சர்மா,தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஆகியோர் இலங்கையில் ஆலோசனை நடத்தினர். ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட பின்னர் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில் உலகக் கோப்பை அணியில் இடம் பெறவுள்ள 15 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரமும் வெளியாகி உள்ளது. ஆனால் அணி வீரர்களின் விவரம் உத்தேசப் பட்டியல் என்று கூறப்படுகிறது.

தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து முழு உடல் தகுதி சான்றிதழ் அளிக்கப்பட்டு விட்டதால் கே.எல்.ராகுல் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இஷான் கிஷன் 2-வது விக்கெட் கீப்பராக உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படுகிறார். இதேபோல் சூர்யகுமார் யாதவும் அணியில் இணையவுள்ளார்.

கே.எல். ராகுல் இடம்பெறுவதால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.

வேகப்பந்து வீரர்களில் ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சிராஜ், மொகமது ஷமி, ஷர்துல் தாக்குர், சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய உத்தேச அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சிராஜ், குல்தீப் யாதவ், மொகமது ஷமி, அக்சர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.

15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நாளை (செப்டம்பர் 5) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

அதே நேரத்தில் கடைசி நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் பிசிசிஐ-இன் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்