ஹராரே: ஜிம்பாப்வே கிரிக்கெட் ஜாம்பவானும், அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான ஹீத் ஸ்டிரீக் காலமானார். அவரது மறைவுக்கு இன்னாள், முன்னாள் வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஹீத் ஸ்டிரீக், ஜிம்பாப்வே அணிக்காக 1993 முதல் 2005 வரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த அணியின் கேப்டனாகவும் அவர் பல போட்டிகளில் விளையாடியுள்ளார். ஓய்வை அறிவித்த பின்னர் ஜிம்பாப்வே அணியின், பயிற்சியாளராகவும் ஸ்டிரீக் பணியாற்றினார். ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய வீரர்களில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரராகவும், அந்த அணியின் ஜாம்பவானாகவும் திகழ்ந்தார் ஹீத் ஸ்டிரீக்.
65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹீத் ஸ்டிரீக் 1,990 ரன்களும், 216 விக்கெட்டுகளும், 189 ஒருநாள் போட்டிகளில் 2,943 ரன்களும், 239 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார். இவர் கடைசியாக கடந்த 2005-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
வங்கதேசம், ஜிம்பாப்வே சர்வதேச அணிகளுக்கும், ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அவருக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்து விட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வதந்தி பரவியது. ஆனால், அதனை அவரே மறுத்து அறிக்கை விட்டிருந்தார். தான் நலமுடன் இருப்பதாகவும், புற்றுநோயிலிருந்து மீண்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை ஹீத் ஸ்டிரீக் உயிரிழந்து விட்டதாக அவரது மனைவி நாடின் ஸ்டிரீக் தனது பேஸ்புக் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.
தனது பேஸ்புக் பதிவில் அவர்கூறியிருப்பதாவது: என் வாழ்க்கையின் மிகப்பெரிய அன்பும், என் அழகான குழந்தைகளின் தந்தையும், குடும்பம் மற்றும் நண்பர்களால் சூழ தனது கடைசி நாட்களைக் கழிக்க விரும்பிய ஹீத் ஸ்டிரீக் தன்னுடைய வீட்டிலிருந்து தேவதூதர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அன்பு மற்றும் அமைதியால் சூழப்பட்டிருந்தார். இவ்வாறு நாடின் ஸ்டிரீக் குறிப்பிட்டுள்ளார்.
ஹீத் ஸ்ட்ரீக் மறைவுக்கு இன்னாள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஹீத் ஸ்டிரீக் மறைவு குறித்து இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கூறியதாவது: ஹீத் ஸ்டிரீக் மறைவு செய்திகேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். 90-களிலும், 2000-ம்ஆண்டுகளிலும் ஜிம்பாப்வே அணியை ஜாம்பவானாக இருந்தவர் ஹீத் ஸ்டிரீக். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மண்: அவர் ஒரு கடுமையான போட்டியாளராக இருந்தார். ஜிம்பாப்வே அணியை வியக்கத்தக்க வகையில் வழிநடத்தினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கடவுள் வலிமை தரட்டும்.
இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்: ஹீத் ஸ்டிரீக்ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்மட்டுமல்ல... அவர் ஒரு அற்புதமான மனிதர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago