கொல்கத்தா: நடப்பு துராந்த் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மோஹன் பகான் அணி. இறுதிப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது அந்த அணி.
கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரையில் துராந்த் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. குரூப் சுற்று மற்றும் நாக்-அவுட் சுற்று என 42 போட்டிகள் நடைபெற்றன. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தொடர் கடந்த 1888-ல் தொடங்கியது. ஆசியாவில் நடைபெறும் பழமையான கால்பந்து தொடராக அறியப்படுகிறது.
நடப்பு தொடரில் ஈஸ்ட் பெங்கால் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மோஹன் பகான் வெற்றி பெற்றது. சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு துராந்த் கோப்பை பட்டத்தை அந்த அணி வென்றுள்ளது. பெட்ராடோஸ் (Petratos) அந்த அணிக்காக கோல் பதிவு செய்தார். கடைசியாக கடந்த 2000-மாவது ஆண்டு நடைபெற்ற தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது அந்த அணி. அதன் பிறகு 2004, 2009 மற்றும் 2019-ல் துராந்த் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது.
17 முறை சாம்பியன்: நடப்பு துராந்த் கோப்பை தொடரை வென்றதோடு சேர்த்து மொத்தமாக 17 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மோஹன் பகான். இதன் மூலம் இந்த தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாகவும் அந்த அணி திகழ்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago