அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் நுழைந்தனர் ஜோகோவிச், இகா ஸ்வியாடெக்

By செய்திப்பிரிவு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 2-ம்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 3-வது சுற்றில் போராடி வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சகநாட்டைச் சேர்ந்த 38-ம் நிலை வீரரான லாஸ்லோ ஜெரேவுடன் மோதினார். இதில் முதல் இரு செட்களையும் லாஸ்லோ ஜெரே 6-4, 6-4 என கைப்பற்றினார். எனினும் அடுத்த 3 செட்களிலும் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-1,6-1,6-3 என கைப்பற்றினார். 3 மணி நேரம் 54 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 4-6,4-6,6-1,6-1,6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 6-1, 6-2, 6-0 என்ற நேர் செட்டில் 206-ம் நிலை வீரரான செக்குடியரசின் ஜக்குப் மென்சிக்கையும், 10-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ 4-6, 6-2, 6-3, 7-6(8-6) என்ற செட் கணக்கில் 22-ம்நிலை வீரரான பிரான்ஸின் அட்ரியன் மனாரினோவையும், 14-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பால் 6-1, 6-0, 3-6, 6-3 என்ற செட்கணக்கில் 21-ம் நிலை வீரரான ஸ்பெயினின் அல்ஜான்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினாவையும் வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 145-ம் நிலை வீராங்கனையான சுலோவேனியாவின் கஜா ஜூவானுடன் மோதினார். இதில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-1 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று 4-வது சுற்றில் கால்பதித்தார். 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப் 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் 32-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸையும், 10-ம் நிலைவீராங்கனையான செக்குடியரசின் கரோலினாமுச்சோவா 7-6(7-0), 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்டையும் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

4-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா, 30-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சோர்னா கிறிஸ்டியாவை எதிர்த்து விளையாடினார். இதில் சோர்னா கிறிஸ்டியா 6-3, 6-7 (6-8), 6-4 என்ற செட் கணக்கில் ரைபகினாவை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

போபண்ணா ஜோடி வெற்றி: ஆடவர் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட்டில் கஜகஸ்தானின் ஆன்ட்ரே கோலுபேவ், ரஷ்யாவின் ரோமன் சஃபியுலின் ஜோடியை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்