முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

By செய்திப்பிரிவு

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் இரவு செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியை 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் என்ற நிலையில் மட்டுப்படுத்தினர் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள். அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 38 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சேர்த்தார். ஃபின் ஆலன் 21, இஷ் சோதி 16 ரன்கள் சேர்த்தனர்.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் அறிமுக வீரரான 28 வயதான வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் 4 ஓவர்களை வீசி 23 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். அவருக்கு உறுதுணையாக வீசிய இடது கை வேகப்பந்து வீச்சாளரான லூக் வுட் 3 விக்கெட்கள் சாய்த்தார். 140 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவிட் மலான் 42 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்களும், ஹாரி புரூக் 27 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் விளாசினர். முன்னதாக ஜானி பேர்ஸ்டோ 4, வில் ஜேக்ஸ் 22 ரன்களில் வெளியேறினர். ஆட்ட நாயகனாக பிரைடன் கார்ஸ் தேர்வானார். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் மான்செஸ்டர் நகரில் இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்