எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி | ஐஓசி - ரயில்வே ஆட்டம் டிரா

By செய்திப்பிரிவு

சென்னை: எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பைக்கான ஹாக்கி தொடரில் நடப்பு சாம்பியனான ஐஓசி - ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் அணிகள் மோதிய ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் பஞ்சாப்நேஷனல் வங்கி - தமிழ்நாடு ஹாக்கிபிரிவு அணிகள் மோதின. இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி 2- 0 என்றகோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அந்த அணி சார்பில் 2-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சஞ்சய் கோலாக மாற்றினார். தொடர்ந்து 49-வதுநிமிடத்தில் நிங்கோம்பம் ஜென்ஜென் சிங் பீல்டு கோல் அடித்து அசத்தினார். பஞ்சாப் நேஷனல் வங்கி அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி லீக் சுற்றை 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகளுடன் நிறைவு செய்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட தமிழ்நாடு ஹாக்கி பிரிவு அணிக்கு இது 3-வது தோல்வியாக அமைந்தது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள தமிழக அணி ஒரு ஆட்டத்தை டிரா செய்து ஆறுதல் வெற்றியைகூட பதிவு செய்யாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

கர்நாடகா வெற்றி: மற்றொரு லீக் ஆட்டத்தில் ஹாக்கி கர்நாடகா - இந்திய கடற்படை அணிகள் மோதின. இதில் கர்நாடகா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் 47-வது நிமிடத்தில் பரத், பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார். 54-வது நிமிடத்தில் செல்சியா மேடப்பா பீல்டு கோல் அடித்தார். இந்திய கடற்படை அணி சார்பில் 28-வதுநிமிடத்தில் சன்னி மாலிக் பீல்டு கோல் அடித்தார். கர்நாடக அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 2 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்றுள்ளது.

கடைசியாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) - ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (ஆர்எஸ்பிபி) அணிகள் மோதின. இந்த ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஐஓசி அணி சார்பில் அங்கித் பால் (2-வது நிமிடம்), தல்வீந்தர் சிங் (32-வது நிமிடம்), குர்ஜிந்தர் சிங் (47-வது நிமிடம்), ரோஷன் மின்ஸ் (56-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

ஆர்எஸ்பிபி அணி தரப்பில் பிரதாப் லக்ரா (30-வது நிமிடம்), குர்சகிப்ஜித் சிங் (33-வது நிமிடம்),யுவராஜ் வால்மிகி (35-வது நிமிடம்), அதுல்தீப் (44-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். அந்தஅணி லீக் சுற்றை 2 வெற்றி, 2 டிராவுடன் 8 புள்ளிகள் சேர்த்துநிறைவு செய்துள்ளது. 3ஆட்டங்களில் விளையாடி உள்ள ஐஓசி2 வெற்றி, 1 டிராவுடன் 7 புள்ளிகள்பெற்று 2-வது இடத்தில் உள்ளது. ஐஓசி தனது கடைசி லீக் ஆட்டத்தில்இன்று மத்திய தலைமை செயலகஅணியுடன் மோதுகிறது. மற்றொருலீக் ஆட்டத்தில் இந்திய விமானப்படை - இந்திய ராணுவ அணிகள் மோதுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்