ஃப்ரான்சைஸ் லீக் கிரிக்கெட்டை புறக்கணித்த ஸ்மிருதி மந்தனா; டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம்!

By செய்திப்பிரிவு

மும்பை: எதிர்வரும் இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் சீசனில் விளையாடும் வகையில் மகளிருக்கான பிக் பேஷ் கிரிக்கெட் லீக்கை புறக்கணிக்க இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக அளவில் ஃப்ரான்சைஸ் லீக் கிரிக்கெட் தொடர்கள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது. வணிக ரீதியான ஆதாயம் இதற்கான காரணம். ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் ஃப்ரான்சைஸ் லீக் கிரிக்கெட் தொடர்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அதனால் தேசிய அணிக்காக ஆடுவதை காட்டிலும் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாட சில வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்வரும் அக்டோபர் 19-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வரையில் இந்தியாவில் நடைபெற உள்ள டொமஸ்டிக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஸ்மிருதி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதனால் அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரையில் நடைபெற உள்ள மகளிருக்கான பிக் பேஷ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க போவதில்லை என தெரிகிறது. அதை குறிப்பிடும் வகையில் அவர் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கான வரைவுப் பட்டியலில் தனது பெயரை பதிவு செய்யவில்லை என தெரிகிறது. அதே நேரத்தில் இந்திய வீராங்கனைகள் சுமார் 18 பேர் இதில் கலந்து கொள்ளும் வகையில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்கும் அடங்குவார்.

மகளிர் ப்ரீமியர் லீக், 'தி ஹன்ட்ரட்' போன்ற லீக் தொடர்களில் ஸ்மிருதி விளையாடி வருகிறார். இதில் அண்மையில் முடிந்த 'தி ஹன்ட்ரட்' சீசனில் 9 இன்னிங்ஸ் விளையாடி 238 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட்டில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா அறியப்படுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்