உலக தடகள சாம்பியன்ஷிப் | இந்தியாவுக்கு 18-வது இடம்

By செய்திப்பிரிவு

புடாபெஸ்ட்: ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. இதன் இறுதி நாளான நேற்று முன்தினம் மகளிருக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் பக்ரைனின் வின்ஃப்ரெட் மட்டில் யாவி பந்தய தூரத்தை உலக சாதனையுடன் 8:54.29 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவின் பருல் சவுத்ரி (9:15.31) 11வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

ஆடவருக்கான 4x400 தொடர் ஓட்டத்தில் குயின்சி ஹால், வெர்னன் நார்வுட், ஜஸ்டின் ராபின்சன், ராய் பெஞ்ஜமின் ஆகியோரை உள்ளடக்கிய அமெரிக்க அணி பந்த தூரத்தை 2:57.31 விநாடிகளில் கடந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றது. பிரான்ஸ் அணி 2:58.45 விநாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப் பதக்கமும், கிரேட் பிரிட்டன் அணி 2:58.71 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கமும் வென்றன. தகுதி சுற்றில் ஆசிய சாதனை படைத்திருந்த முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 2:59.92 விநாடிகளில் கடந்து 5-வது இடம் பிடித்தது.

இந்தியாவுக்கு 18-வது இடம்: 9 நாட்கள் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் திருவிழாவில் அமெரிக்கா 12 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என 29 பதக்கங்களை குவித்து பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்தது. இந்தியா ஒரே ஒரு தங்கத்துடன் 18-வது இடத்தை பெற்று தொடரை நிறைவு செய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்