ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான்: ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம்!

By செய்திப்பிரிவு

கொழும்பு: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இலங்கையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. இந்த மூன்று போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, தொடரையும் வென்றுள்ளது. முதல் போட்டியை 142 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியை இறுதி ஓவரிலும் வென்றிருந்தது பாகிஸ்தான். நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்.

இதன் மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான். தற்போது பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு சிறப்பான பயிற்சி தொடராக அமைந்துள்ளது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்