உலக தடகள சாம்பியன்ஷிப் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் நெதர்லாந்தின் ஃபெம்கே போல் தங்கப் பதக்கம் வென்றார். அவர், இலக்கை 51.70 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். அமெரிக்காவின் ஷாமியர் லிட்டில் 52.80 விநாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப் பதக்கமும், ஜமைக்காவின் ரஷல் கிளேட்டன் 52.81 விநாடிகளில் இலக்கை எட்டிப்பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மகளிருக்கான சங்கிலி குண்டு எறிதலில் கனடாவின் கேம்ரின் ரோஜர்ஸ் 77.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். அமெரிக்காவின் ஜானி கசானவாய்ட் 76.36 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், டிஅனா பிரைஸ் 75.41 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்காவின் டேனியல் வில்லியம்ஸ் பந்தய தூரத்தை 12.34 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். போர்ட்டோ ரிகோவின் ஜாஸ்மின் காமாச்சோ-குவின் 12.44 விநாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் கென்ட்ரா ஹாரிசன் 12.46 விநாடிகளில் இலக்கை எட்டிப்பிடித்து வெண்கலப் பக்கமும் கைப்பற்றினர்.
ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் கீரிஸ் வீரர் மிலிடேட்ஸ் டெண்டோக்லோ 8.52 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். ஜமைக்காவின் வெய்ன் பின்னாக் 8.50 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், தஜய் கெய்ல் 8.27 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago